Latestமலேசியா

அம்னோ பதவியை நிராகரித்தார் அபாண்டி!

கோலாலம்பூர், ஜூலை.15- முன்னாள் சட்டத்துறை தலைவரான டான்ஶ்ரீ முகம்மட் அபாண்டியை, அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு அதன் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி நியமிப்பதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியை ஏற்கப் போவதில்லை என அறிவித்தார் அபாண்டி.

இந்த நியமனத்தின் வழி ஏற்படப்போகும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் யூகங்களைத் தவிர்ப்பதற்காக தாம் இந்த நியமனத்தை ஏற்க மறுப்பதாக அபாண்டி சொன்னார்.

மிக ஆழமாகச் சிந்தித்த பின்னர் நான் இந்த முடிவுக்கு வந்தேன் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் சட்டத்துறைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன். இந்நிலையில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியால் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் எழக்கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அவற்றைத் தவிர்க்கவே நான் விரும்பினேன் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker