Latestவிளையாட்டு

இங்கிலாந்துக்கு 4ஆவது இடம்: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது!

செய்ண்ட் பீட்டர்ஸ்பெர்க், ஜூலை.15- உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம் குழு 2-0 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்தை வென்றது.

அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட இவ்விரு குழுக்களும் 3ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் மோதின. ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்திலேயே பெல்ஜியத்தின் முன்னணி வீரர் தோமஸ் மியுனியர் ஒரு கோலைப் போட்டு குழுவை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய பின்னர் கூடுதலான நெருக்குதலை பெல்ஜியத்திற்கு அளித்தது என்றாலும் எதிர்பார்த்ததைப் போலபிங்கிலாந்தினால் கோலடிக்க இயலவில்லை.

முன்னணி வீரர் ஹர்ரி கேன் தலைமையிலான இங்கிலாந்து குழுவினர் இயல்பாகவே களைத்துக் காணப்பட்டனர். இந்நிலையில் 82ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் மத்திய திடல் வீரர் எடென் ஹஸார்ட் தனது குழுவுக்கான 2ஆவது கோலை அடித்தார்.

இந்த ஆட்டம் 2-0 என்ற கோல்கணக்கில் பெல்ஜியத்திற்கு சாதகமாக அமைந்தது. இங்கிலாந்து குழு இப்போட்டியில் 4ஆவது இடத்தைப்பெற்றது.

இன்று பின்னிரவு, அதாவது மலேசிய நேரப்படி (திங்கள் கிழமை) அதிகாலை 2 மணியளவில் உலகக் கிண்ண இறுதியாட்டம் நடைபெறவுள்ளது. பிரான்சும் குரோஷியாவும் இந்த பரபரப்பான இறுதியாட்டத்தில் மோதவிருக்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker