Latestமலேசியா

நஜிப்பின் முன்னாள் உதவியாளர் ஜாமீனில் விடுதலை!

புத்ராஜெயா, ஜூலை.15- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு உதவியாளர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யாதததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சரவாக்கில் உள்ள பள்ளியில் சூரிய சக்தி ஈர்ப்பு தகடு பொருத்தும் பணத்தை மோசடி செய்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்ட
அவரை விடுதலை செய்ய மாஜிஸ்திரேட் கிபிக்கா முகமட் ஸம்ரி அனுமதி வழங்கினார்.

அவரை மேலும் தடுப்புக் காவலில் வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்வராதத்தைத் தொடர்ந்து 44 வயதுடைய ‘டத்தோ’ அந்தஸ்துள்ள அந்த உதவியாளரை 16 ஆயிரம் ரிங்கிட் ஜாமினில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார்.

2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் 49-ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்ட அவர் கடந்த செவ்வாய்க்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வாக்குமூலம் கொடுக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

இன்று காலை நீதிமன்றத்திற்கு அவருடன் அவரின் வழக்கறிஞர் ரிட்ஹா அப்டா சுப்ரியும் வந்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 3 இயக்குநர்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker