Latestமலேசியா

முன்னாள் நீதிபதி அரீப்- புதிய சபாநாயகர்!

கூச்சிங், ஜூலை.15- நாளை தொடங்கும் 14ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் போது மக்களவையின் புதிய சபாநாயகராக முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ முகம்மட் அரீப் முன்மொழியப்படுவார் என்று பிரதமர் துன் மகாதீர் உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்ற சபாநாயகர் பொறுப்புக்கான வேட்பாளர் தேர்வு பற்றி துன் மகாதீரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது ‘எங்களிடம் வேட்பாளர் ஏற்கெனவே உள்ளார். அவர் ஒரு முன்னாள் நீதிபதி. அவருடைய பெயர் டத்தோ முகமமட் அரீப்’ என்று பதில் சொன்னார்.

சரவாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் மகாதீர், அம்மாநிலத்தின் மேம்பாடு குறித்து இரகசிய விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் சரவா முதல்வர் அபாங் ஜொகாரி மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker