Latestமலேசியா

விபத்துக்களின் போது நடக்கும் திருட்டுகளை தடுக்க கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை.15- இயற்கை பேரழிவுகள், விபத்துக்கள் போன்ற அவசர காலங்களின் போது சில பொறுப்பற்ற தரப்பினர் புரியும் திருட்டுக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  டான்ஸ்ரீ லீ லாம் தாய் கூறினார்.

அத்தகைய சம்பவங்களின் பின்னர் ஏற்படும் முதல் சவால்களில் ஒன்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது சொத்துகளுக்கும் அடிப்படைப் பாதுகாப்பு வழங்குவதே ஆகும் என்றார் அவர்.

“பாதிக்கப்பட்டவர்கள் விபத்துக்குள்ளான பின்னரோ, அவர்களது வீடுகள் நிலச்சரிவுகள் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பின்னரோ அவர்களின் தனிப்பட்ட உடமைகள் காணாமல் போனது தொடர்பாக பல வழக்குகள் பதிவாகி உள்ளன,” என மலேசிய குற்றச்செயல் தடுப்பு ஆணையத்தின் உதவித் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தாய் தெரிவித்தார்.

சமூக பாதுகாப்பு கொள்கைகளைச் செயல்படுத்த தடுத்துவதற்கு குற்றத் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது ஒரு நீண்ட கால வியூகத் திட்டம் என்பதால் அரசாங்கத்தின் உறுதிப்பாடு மற்றும் முதலீடு தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, இயற்கை பேரழிவுகள் அதிகம் நிகழக்கூடிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி வளர்ச்சி கொள்கைகள் சமூகத்தில் அனைத்து வகையான சமூக மூலதனத்தையும் நம்பிக்கையையும் உருவாக்க உதவும் என்றும் லீ லாம் தாய் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker