Latestவிளையாட்டு

ஆர்.டி.எம்மில் பிரிமியர் லீக் கால்பந்து அமைச்சு ஆராய்கிறது! –கோபிந்த் சிங்

கோலாலம்பூர், ஜூலை.16- உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை ஆர்.டி.எம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வெற்றி கண்டதை தொடர்ந்து, பிரிமியர் லீக் கால்பந்து ஆட்டங்களின் நேரலையை ஒளிப்பரப்ப தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு உத்தேசித்து வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

கடந்த ஒரு மாதக் காலமாக, உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக ஒளிப்பரப்பிதற்காக ஆர்.டி.எம் தொலைக்காட்சிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளதைத் தொடர்ந்து, இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து ஆட்டங்களை நேரடியாக ஒளிப்பரப்புவது குறித்து அவ்வமைச்சு ஆராய்ந்து வருகிறது.

“இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களின் நேரடி ஒளிப்பரப்பை இவ்வாண்டில் எங்களால் வழங்க முடியாது. அதற்கு அதிகம் செலவாகும். அடுத்தாண்டிலும் எங்களால் வழங்க முடியாது. எதிர்காலத்தில் இதற்கு சாத்தியம் உண்டு” என்று கோபிந்த் சொன்னார்.

அரசாங்க தொலைக்காட்சிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில், விளையாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்ப அவ்வமைச்சு ஆர்வம் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த மாதம் 14-ஆம் தேதியிலிருந்து நேற்று வரை ரஷியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் 64 ஆட்டங்களில், 41 ஆட்டங்களை நேரடியாக ஒளிப்பரப்ப, எம்.சி.எம்.சி, மெக்சீஸ் மற்றும் ஏர் ஆசியா நிறுவனங்களின் ஆதரவில் ரிம.30 மில்லியன் தொகையை பீஃபாவிற்கு (FIFA) செலுத்தியது.

இதனிடையில், ஆர்.டி.எம்மின் ஒளிப்பரப்பு தரத்தை மெருகேற்றும் பொருட்டு, நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப் படும் ‘மீடியா சிட்டி திட்டம்’ இன்னும் இரு மாதங்களில் முடிவடையும் என்றும் கோபிந்த் அறிவித்தார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker