Latestமலேசியா

கிரேப் ஓட்டுனர் கொலை : 2 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு

செலாயாங், ஜூலை.16 – கடந்த ஜூன் மாதம் கிரேப் ஓட்டுனர் ஒருவர் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு வெளிநாட்டவர்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜூன் 21-ஆம் தேதி தாமான் செலாயாங் மாக்மூர் கார் நிறுத்துமிடத்தில் ‘கிரேப்’ ஓட்டுனரான 27 வயது அய்மான் நோஸ்ரியை கொலை செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த குர்பிரிட் சிங் மற்றும் மியான்மாரைச் சேர்ந்த சுவா லாய் ஆகிய இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) அட்டையை வைத்துள்ள சுவா லாய் ஒரு சந்தையில் உதவியாளராகவும் குர்பிரிட் சிங் உதவி லோரி ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தனர்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவருக்கும் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்டு 25-ஆம் தேதி நடத்தப்படும் என மாஜிஸ்திரெட் நுருல் இசா ஹசான் உத்தரவிட்டார்.

கொலை செய்யப்பட்ட அய்மான் நோஸ்ரி கடந்த ஜூன் 23-ஆம் தேதி இரவு 8.20 அளவில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த நிலையில் அவரது புரோடுவா மைவி காரில் கண்டுப்பிடிக்கப்பட்டார். அய்மான் அவரது டி-சட்டையால் கழுத்து நெரிக்கப்பட்டதால்தான் மூச்சுத் திணறி இறந்ததாக சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த அன்று அதிகாலை 1 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவனும் பெண்ணும்  செலயாங்கில் உள்ள ஒரு பகுதியிலிருந்து சவாரிக்காக ஏற்றப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் மஸ்லான் மன்சூர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker