Latestமலேசியா

சபாநாயகராக ஆகும் முன்பு அமானாவிலிருந்து விலகிய முகமட் அரிப்

கோலாலம்பூர், ஜூலை.16 – மக்களைவையின் புதிய சபாநாயகர் பதவிக்கு டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப்பின் பெயர் பரிந்துரைக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே அவர் அமானா கட்சியில் இருந்து விலகியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகமட் அன்வார் தாஹிர் கூறினார்.

இன்று மக்களவை சபாநாயகராக பதவியேற்ற முகமட் அரிப்  இம்மாதம் முதலாம் தேதி அமானாவின் கட்டொழுங்கு செயற்குழுத் தலைவர், நிபுணத்துவ ஆலோசக் குழு உறுப்பினர் ஆகிய இரு பதவிகளிலிருந்தும் விலகினார்.

“எங்களுக்கு அவருடைய பதவி விலகல் கடிதம் கிடைத்த நாளன்றே அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆகையால், அவர் இப்போது கட்சியின் ஒரு சாதாரண உறுப்பினர் ஆவார்” என முகமட் அன்வார் குறிப்பிட்டார்.

மக்களைவையின் புதிய சபாநாயகர் பதவிக்கு முகமட் அரிப்பை பரிந்துரை செய்த கடிதம் கடந்த ஜூலை 2-ஆம் தேதி நாடாளுமன்றச் செயலாளர் டத்தோ ரோஸ்மி ஹம்ஸாவிற்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker