Latestசினிமா

பாலியல் தொல்லை:- அரசியல்வாதிகள் மீது ஸ்ரீரெட்டி புகார்!

ஐதராபாத், ஜூலை. 16- தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார்களால் தெலுங்கு படவுலகம் கலகலத்துப் போய் இருக்கிறது.  இப்போது  தமிழ்ப் படத் துறையினர் மீதும் பாலியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அடுத்து தெலுங்கு அரசியல்வாதிகள் மீதும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார். இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.

பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்ற வதந்தி பரவி உள்ளது, இந்நிலையில்
ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:

முதலமைச்சர்  சந்தரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:-

மதிப்புக்குரிய முதலமைச்சர்  சந்தரசேகரராவ் அவர்களுக்கு தெரிவிப்பது, கதாநாயகிகளை படுக்கையில் பாலியலுக்கு பலியாக்கிய அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். நான் அவர்கள் விவரங்களை வெளியிடவில்லை. தேன் கூட்டில் கை வைக்க  விரும்பவில்லை. மீறிச் சொன்னால் அந்த அரசியல்வாதிகள் என்னை கொன்று விடுவார்கள்.

எனக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் பிரச்சினையில் உங்களுக்கு வேண்டியவர்களும் இருக்கிறார்கள். நான் அரசியல் பக்கம் வரவில்லை. ஆனாலும், தெலுங்கு நடிகர்கள் சங்கம் எனக்கு நிறைய தொல்லைகள் கொடுக்கிறது. நீங்கள் தெலுங்கானாவுக்கு தந்தை போல இருக்கிறீர்கள். எனது நிலைமை மோசமாக உள்ளது.

பிரச்சனைக்கு முடிவு கட்டி நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள் நான் ஐதராபாத்தில் நுழைய தயவு செய்து தடை விதித்து விடாதீர்கள் . நான் உண்மைகளையே பேசி வருகிறேன். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker