Latestமலேசியா

பினாங்கு மெகா திட்டங்கள்: அனுமதிக்கு காத்திருக்கிறோம்! –முதல்வர்

ஜோர்ஜ் டவூன், ஜூலை.16- பினாங்கு மாநிலத்தின் மூன்று துரித நெடுஞ்சாலை போக்குவரத்து திட்டங்கள், கடலடி சுரங்கப் பாதை திட்டம் மற்றும் போக்குவரத்து பெருந்திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசாங்க ஏஜென்சிகளின் அனுமதிக்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சோவ் கொன் இயூவ் கூறினார்.

“அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்களை மாநில அரசாங்கம் சமர்ப்பித்து விட்டது. மத்திய அரசாங்க ஏஜென்சிகள் அது குறித்து என்ன முடிவெடுத்துள்ளன என்பதை தெரிந்துக் கொள்ள நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

“அத்திட்டங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படுமா என்பது குறித்து இதுவரை எங்களுக்கு எவ்வித தகவல்களும் தெரிவிக்கப் படவில்லை” என்று அவர் சொன்னார்.

பல பில்லியன் செலவில் உருவாகிவரும் பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து பெருந்திட்டத்தில் விரைவு இரயில் போக்குவரத்து, மோனோ இரயில் போக்குவரத்து, கேபள் கார், கப்பல் போன்ற போக்குவரத்து சேவைகள் உள்ளடக்கியுள்ளன.

அம்மாநில மக்கள் சந்தித்து வரும் வாகன நெரிசல் பிரச்சனையை களையும் வகையில், அந்தப் போக்குவரத்து பெருந்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. அப் பெருந்திட்டத்தில் உள்ளடங்கிய விரைவு இரயில் போக்குவரத்து திட்டம் கூடிய விரைவில் தொடங்கப் படும் என்று சோவ் கருத்துரைத்தார்.

அதுமட்டுமல்லாது, கடலடி சுரங்கப் பாதை திட்டத்தின் கீழ், ஆயீர் ஹித்தாம், துன் டாக்டர் சொங் இயூ எக்ஸ்பிரஸ்வே பைபாஸை இணைக்கும் திட்டங்கள், அடுத்தாண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கப் படும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker