Latestமலேசியா

பொது இடத்தில் அரை நிர்வாணமாக யோகா செய்த பெண்!

பிந்துலு, ஜூலை.16 – தாமான் பண்டார் ஜெயாவில் பெண்மணி ஒருவர் பொது இடத்தில் அரை நிர்வாணமாக யோகா செய்தது அப்பகுதியில் பரபரப்பை வெளிப்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 4.30 மணி அளவில் 30 வயதான அந்த பெண்மணி அலாமாண்டா சாலைக்கு அருகே உள்ள திடலுக்கு நடந்து சென்று அரை நிர்வாணத்தில் ஏதொவோர் ஆசனத்தைச் செய்துள்ளார்.

அச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டுள்ளனர். எனினும் போலீஸ் அவ்விடத்திற்கு வந்தப் போது, சம்பந்தப்பட்ட பெண் தப்பித்து ஓடிவிட்டார்.

“அப்பெண்ணை இதற்கு முன்பு நான் இப்பகுதியில் கண்டுள்ளேன். ஆனால், இக்குடியிருப்புப் பகுதியில் அவரை நிர்வாணமாகக் காண்பது இதுவே முதல் முறை,” என அப்பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு குடியிருப்பாளர் தெரிவித்தார்.

அப்பெண் மற்ற குடியிருப்பாளர்களுக்கு எந்த விதமான தொந்தரவும் கொடுக்கவில்லை என்றாலும் அவரின் செயல் மற்றவர்களுக்கு குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது.

அதோடு, அப்பெண் மன அழுத்தம் அல்லது பிற உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது உண்மையாக இருந்தால் அதிகாரிகள் அவளுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுப்பர் என்று நம்புவதாக அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்.

மேலும், அப்பெண் இதற்கு முன்னரும் ஒரு பள்ளிக்கூடத்திற்கு வெளியே நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் எனவும் தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker