Latestமலேசியா

மக்களவை: 10 நிமிடங்களிலேயே அம்னோ, பாஸ் வெளிநடப்பு (VIDEO)

கோலாலம்பூர், ஜூலை.16- 14ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் காலை 10 மணிக்குத் தொடங்கப்பட்டு 10 நிமிடங்களிலேயே எதிர்கட்சித் தரப்பு வெளிநடப்பு செய்தது.

Video Source: Youtube

மக்களவை சபாநாயகராக டத்தோ முகமட் அரிப் யூசோப்பின் பெயர் முன்மொழியப்பட்டபோது, அந்த நியமனத்தை ஆதரிக்காது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

முகமட் அரிப்பின் பெயர் மட்டுமே அப்பதவிக்கு முன்மொழியப்பட்ட நிலையில், மக்களவைச் செயலாளர் டத்தோ ரோஸ்மி ஹம்சா அவரது நியமனத்தை உறுதிப்படுத்தினார். அப்போது, இந்த நியமனம் மக்களவை விதிகளை மீறியுள்ளதாகக் கூறி, பாஸ் கட்சியைச் சேர்ந்த கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ தாக்கியூடின் ஹாசான் குரல் எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தரப்பினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தரப்பில் கைரி ஜமாலுடின் மட்டும்கே மக்களவையில் உட்கார்ந்திருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker