Latestமலேசியாவிளையாட்டு

மலேசியாவின் பிரபல கால்பந்து பயிற்சியாளர் சோவ் குவாய் லாம் காலமானார்

கோலாலம்பூர், ஜூலை.16 – மலேசியாவின் பிரபல கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான சோவ் குவாய் லாம் தனது 76-ஆவது வயதில் இன்று இயற்கையை எய்தினார்.

1995, 2000, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பக்கவாதத்தால் தாக்கப்பட்ட அவர் அம்பாங் புத்ரி மருத்துவமனையில் இன்று காலை 11 மணி அளவில் மரணமடைந்தார்.

1965-ஆம் ஆண்டிலிருந்து 1971-ஆம் ஆண்டு வரை தேசிய கால்பந்து அணியில் இருந்த சோவ்,  1965-ஆம் ஆண்டு நடைபெற்ற மெர்டேக்கா கால்பந்து போட்டியில் தேசிய கால்பந்து அணியில் தலைவராக பதவி வகித்தார்.

அது மட்டுமல்லாது, 1978-ஆம் ஆண்டு தேசிய கால்பந்து அணிக்கும் 1979-ஆம் ஆண்டிலிருந்து 1983-ஆம் ஆண்டு வரை சிலாங்கூர் கால்பந்து  அணிக்கும் அவர் பயிற்சியாளராக விளங்கினார். அதன் பின்னர் 1984-ஆம் ஆண்டு சரவாக் கால்பந்து அணிக்கு பயிற்சி வழங்கிய அவர் 1987-ஆம் ஆண்டிலிருந்து 1989 வரையும்,1992, 1995-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரையும் கோலாலம்பூர் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து, 1990-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை சோவ் ‘பார்சிலோனா பேப்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட தேசிய கால்பந்து அணிக்கு பயிற்சி அளித்தார்.

மேலும், கால்பந்து சகாப்தம் என அழைக்கப்படும் அவர் மலேசியாவில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டிகளில்  1987,1988,1989 ஆகிய ஆண்டுகளில் கோலாலம்பூர் கால்பந்து அணி மலேசிய கோப்பையை வெல்வதற்கு பக்கபலமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker