Latestமலேசியா

மீண்டும் மலேசியாவுக்கு பெருமைச் சேர்த்த மாசாய் தமிழ்ப்பள்ளி! – (video)

ஷா ஆலாம், ஜூலை.16-ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியாவைப் பிரதிநிதித்து போட்டியிட்ட மாசாய் தமிழ்ப்பள்ளி அந்தப் போட்டியின் வெற்றியாளராக சாதனைப் படைத்துள்ளது.

தொடக்கப்பள்ளிகளுக்கான பிரிவில் மலேசியா வெற்றிப் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும் இந்த வெற்றியின் சிறப்பாகும். அதிலும் ஒரு தமிழ்ப்பள்ளி இந்த வெற்றியை நாட்டுக்குப் பெற்றுத் தந்திருப்பது இந்தியர்களுக்கு பெருமையைச் சேர்த்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்போட்டியில், மலேசியா, சிங்கப்பூர், புருணை, தாய்லாந்து, சீனா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. நைஜீரியா கடைசி நேரத்தில் இப்போட்டியில் பங்கேற்ப முடியாமல் போனது.

கடந்த மே 26-ஆம் தேதி ஹோங் கோங்கில் நடைபெற்ற அனைத்துலக ஆங்கில நாடகத்தில், இதே மாசாய் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும், சிறந்த ஆடை அலங்கார விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Sports science Drama performance of our children at the Finals! Competing at International level with participants from Singapore,Thailand, Nigeria & Philippines!

Posted by PIBG SJKT MASAI 2018 on Friday, 13 July 2018

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker