Latestவிளையாட்டு

விளையாடிக் கொண்டிருந்த போதே உயிர்நீத்த ரக்பி வீரர்!

லண்டன், ஜூலை.16- பிரிட்டனைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த  போது திடலிலேயே சுருண்டு விழுந்து இறந்ததால் சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

யார்க்ஸயர் ஆண்கள்  ரக்பி போட்டி ஹிவெர்த் என்ற இடத்தில் நடந்தது. இதில் பெர்கின்ஷோ புளூ  அணிக்காக மேக்ஸ் பிளாக்கிலி (வயது 32) என்பவர் விளையாடினார். திடலில் விளையாடி கொண்டிருந்த போது மேக்ஸூக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கு வந்த மருத்துவர்கள் மேக்ஸூக்கு சிகிச்சையளிக்க முயன்ற நிலையில் அதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.அதை பார்த்த அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

மேக்ஸ்யின் நண்பர் லீ கூறுகையில், ‘அவருக்கு பிடித்ததை தான் மேக்ஸ் எப்போதும் செய்வார்.  மேக்ஸ் உன் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது’ என உருக்கமாக கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker