Latestமலேசியா

இரண்டாவது தேசிய கார்: வரவேற்பு இல்லை; மகாதீர் வருத்தம்

கோலாலம்பூர், ஜூலை.17- இரண்டாவது தேசிய காரைத் தயாரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு மக்களின் வரவேற்பு குறைவாக இருப்பதாக பிரதமர் துன் மகாதீர் வருத்தம் தெரிவித்துள்ளார். புரோட்டன் நிறுவனம் கண்ட தோல்வியே போதும் என மக்கள் எண்ணுவதாக அவர் குறிப்பிட்டார்.

சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களை வாங்க மலேசியர்கள் தயாராக இருக்கிறார்களே தவிர, இன்னொரு தேசிய கார் அவசியம் இல்லை என அவர்கள் எண்ணுகின்றனர்.

ஒரு காலத்தில், ஜப்பான் காரின் சாயத்தைக் கீறிப் பார்த்தால், அந்த கார் “மைலோ” டின்னில் தயாரிக்கப்பட்டிருக்குமோ என பயனீட்டாளர்கள் கேலி செய்தனர். ஆனால் பின்னொரு நாளில் அந்த கார்தான் தோயோட்டா, நிஸ்ஸன், சுஸுக்கி ஆகிய மாடல்கள் உருவாக வித்திட்டது.

ஆனால், மலேசியா மட்டும் காலத்திற்கும் “மைலோ” டின் காரைத்தான் தயாரிக்கும் என மக்கள் தவறான கண்ணோட்டத்துடனே உள்ளனர். தொடக்கத்திலேயே மக்கள் இரண்டாவது தேசிய கார் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அத்திட்டத்தை அரசாங்கம் கைவிடப் போவதாக துன் மகாதீர் கூறினார்.

சொந்த வாகனத் தொழிற்துறையைக் கொண்ட நாடாகும் மலேசியாவின் 2020 தூரநோக்கு கனவை மூட்டைக் கட்டிவிட வேண்டியதுதான் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker