Latestமலேசியா

பிரதமர் துறை அமைச்சர் ஆனார் வேதமூர்த்தி!

கோலாலம்பூர், ஜூலை.17- தேசிய ஒருமைப்பாட்டுக்கும், சமூகநலனுக்கு உரிய பிரதமர் துறை அமைச்சராக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று இஸ்தானா நெகாராவில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

செனட்டராக பதவி ஏற்ற பிறகு அவர் இந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

வேதமூர்த்தியுடன் சேர்ந்து செனட்டர்களாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட ஜசெகவின் லியூ சின் தோங் தற்காப்பு துணையமைச்சராகவும், அமானாவின் ராஜா கமாருல் பஹ்ரின் ஷா வீடமைப்பு, ஊராட்சி துணையமைச்சராகவும், பெர்சாத்துவின் டாக்டர் முகமட் ரட்சி முகமட் ஜிடின் பொருளாதார துணையமைச்சராகவும், மர்சுக்கி யாஹ்யா வெளியுறவு துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker