Latestஉலகம்

வியாழன் கிரக நிலாவில் எரிமலை! -நாசா அறிவிப்பு

நியூயார்க், ஜுலை. 17- வியாழன் கிரகத்திற்கு சொந்தமான நிலவில் பெரிய எரிமலை இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. நாசா நிறுவனத்தின் ‘யூனோ’ விண்கலமே இந்த எரிமலையை படம் பிடித்துள்ளது.

யூனோ விண்கலமானது வியாழன் கிரகத்திவிருந்து 4 லட்சத்து 70,000 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்து புகைப்படக் கருவி மூலம் அந்த எரிமலையினைப் படம் பிடித்துள்ளது.

எவ்வாறெனினும் நிலவில் எரிமலை கண்டுபிடிக்கப்படுவது இது முதன் முறை அல்ல. சுமார் 150 க்கும் அதிகமான உயிரோட்டம் கொண்ட எரிமலைகள் இது வரை இங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

அவற்றுள் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எரிமலையே அதிக வெப்பத்தை கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யூனோ விண்கலமானது 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker