Latestமலேசியா

நாடாளுமன்றத்தில் இருந்த அந்த “முனிவர்” யார்? – வேதா

கோலாலம்பூர், ஜூலை.18- நேற்று நாடாளுமன்றத்தில் தமது பதவியேற்புக்கு வந்திருந்த ஓர் இந்து சமய கல்விமானை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் தொடர்பில் புதிய பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அருணாசலநந்தாஜி என்ற அந்த முனிவர் இந்திய பிரஜை இல்லை என்றும் ஆனால் அவர் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உலக அமைதிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் தமது வாழ்க்கையில் பெரும் பகுதியை அர்ப்பணித்த அந்த மாமனிதர் தம்முடைய நல்ல தோழர் மட்டுமல்ல தம்முடைய உறவுக்காரரும்கூட என அவர் மேலும் விவரித்துள்ளார்.

நேற்று தமது அழைப்பை ஏற்று நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த அருணாசலநந்தாஜியின் படத்தை சமூக ஊடங்களில் பகிர்ந்ததும் மட்டுமின்றி அவரை பேய் என்றும் குறிப்பிட்டிருந்ததாக வேதமூர்த்தி கூறினார்.

“உலக அமைதிக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் அருணாசலநந்தாஜி, எனது பதவி ஏற்பை நேரில் வந்து பார்த்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்” என வேதமூர்த்தி தெரிவித்தார்.

அருணாசலநந்தாஜியை அவமதிக்கும் வகையில் சித்தரித்திருந்த தரப்பினருக்கு வேதமூர்த்தியின் இந்த கூற்று தக்க பதிலடியாக அமைந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker