Latestமலேசியா

இராமசாமி தொடர்பாக 53 போலீஸ் புகார்கள்! -ஐஜிபி தகவல்

சுபாங் ஜெயா, ஜூலை.19- பினாங்கின் 2ஆவது துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தொடர்பாக இதுவரை 53 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றில் இராமசாமியே செய்துள்ள புகார் ஒன்றும் அடங்கும் என்று மலேசியப் போலீஸ் படையின் தலைவர் டான்ஶ்ரீ முகம்மட் ஃபுஸி தெரிவித்தார்.

இலங்கையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இராமசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஐஜிபி ஃபுஸிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று வரைக்கும் இராமசாமி தொடர்பாக 53 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தாங்கள் தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

தொடக்கத்தில் இந்த விசாரணையை பினாங்கு போலீசார் தான் நடத்தினர். பின்னர் அந்த விசாரணையை புக்கிட் அமான் கையாள வேண்டும் என்று தாம் உத்தரவிட்டதாக அவர் சொன்னார்.

அவரிடம் வாக்குமூலம் பதிய வேண்டிய அவசியம் இருக்குமானால், நாங்கள் அவ்வாறு செய்வோம் என்று ஐஜிபி ஃபுஸி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker