Latestமலேசியா

காருக்கு SST வரி இல்லையா? மறுத்தார் சுங்கத் தலைவர்!

கோலாலம்பூர், ஜூலை.19- செப்டம்பர் முதல் தேதி அமலுக்கு வரவிருக்கும் எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரித் திட்டத்தின் கீழான பட்டியலில், கார்களுக்கு விலக்கு என்று வெளியான ஊடகச் செய்தியை சுங்கத்துறை தலைவர் டத்தோஶ்ரீ டி.சுப்பிரமணியம் மறுத்தார்.

விற்பனை வரி விலக்கு என்பது வாகனத் தயாரிப்பாளர்களுக்கானதே தவிர கார்கள் வாங்குவோருக்கு உரியது அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சுங்கத்துறையின் வரி விலக்கு பட்டியலில் கார்கள் இடம் பெறவில்லை என்பதால் கார்களை வாங்குவோருக்கு விற்பனை வரி இருக்காது என்று முன்பு தகவல் பரவியது  என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் மறுத்தார். அந்த விலக்கு வாகனத் தயாரிப்பாளர்களுக்கு உரியது. புதிதாக கார் வாங்குகிறவர்களுக்கு அல்ல என்றார் அவர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker