Latestஇந்தியா

டிவி நடிகை பிரியங்கா தற்கொலை: நீடிக்கிறது மர்மம்! தோழிகள் குழப்பம்

சென்னை, ஜூலை.19- சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தாய்மை அடையாத காரணத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் தன்னம்பிக்கை மிக்கவரான அவரது தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருந்திருக்க வேண்டும் என்று அவரது சக நடிகை ஒருவர் கூறினார்.

அது தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக சில நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவார்கள். எனவே, தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்கு காரணமல்ல என அவருடன் இணைந்து நடித்த நடிகை நீலிமா ராணி கூறியுள்ளார்.

மிகவும் தைரியமான பெண்ணான பிரியங்கா தனது கணவரின் மீது மிக அன்பு வைத்திருந்தார். எல்லா வீடுகளிலும் இருக்கும் கணவன் – மனைவி பிரச்சனைதான் இவர் வீட்டிலும் இருந்திருக்கிறது. அப்படியிருக்கையில் மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?

மதுரையை சேர்ந்த இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்தார். அருண் என்பவரை தனது ஆசைப்படியே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரியங்கா தன்னுடைய கணவரை மாமான்னு தான் கூப்பிடுவார். அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தாள். என் மாமா இல்லைன்னா நான் உயிரோடே இருக்க மாட்டேன் என அவ்வப்போது தன்னுடன் நடிக்கும் நடிகைகளிடம் கூறியுள்ளார்.

ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடி. அவ்வளவு அன்பா இருந்தாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். இனி அவளைக் காண முடியாதே என்ற துயரத்தில் இருக்கிறோம் என நடிகை சந்தியா கூறியுள்ளார்.

ஆனால், குடும்பத்தில் இருவருக்குள் இருக்கும் பிரச்சனை என்ன எனப்து தெரியவில்லை தெரியவில்லை. இரு வாரங்களுக்கு முன்னர் தான் அழகு நிலையம் ஆரம்பித்தார்., தனது நண்பர்களை எல்லாம் அழைத்திருந்தார். இப்படி தன்னம்பிக்கையோடு இருந்த பெண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் எனக் கேள்வி எழும்பியுள்ளது.

இவரது இறப்பிற்கான காரணம் குறித்து தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது. இது குறித்து போலிசார் அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இறுதியில் இந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker