Latestஉலகம்

தமிழ் நடிகைகளுக்கு மரியாதை இல்லை! -ஐஸ்வர்யா ராஜேஸ்

சென்னை, ஜூலை.19- மற்ற மொழி பேசும் நடிகைகளை விட தமிழ்ப் பேசும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பும்-மரியாதையும் குறைவாகத்தான் இருக்கிறது என்று தமிழ் நடைகை ஐஸ்வர்யா ராஜேஸ் கூறினார்.

2011இல் “அவர்களும் இவர்களும்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். அதன் பின் பல படங்களில் நடித்தார். இருப்பினும் ‘காக்கா முட்டை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படங்களாகும்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஸ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: தமிழ் சினிமாவில் தமிழ் மண்ணில் பிறந்த நடிகைகளுக்கு மவுசு குறைவு. ஆனால் இந்தி, மலையாளம் மொழி சினிமாக்களில் அந்த மாநில நடிகைகள் அதிகமாக இருந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

தமிழ்ப் படங்களில் மட்டும் தான் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதில்லை. மும்பை மற்றும் மலையாள பெண்களுக்கு கிடைக்கிற மவுசும்- அந்தஸ்தும் தமிழ் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என மனவருத்தத்துடன் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker