Latestஇந்தியா

திருப்பதியில் ஒரேநாளில் ரூ. 3.45 கோடி காணிக்கை

திருமலை, ஜூலை 19- திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 3 கோடியே 45 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி பூதேவியருடன் மலையப்ப சுவாமி புஷ்பப் பல்லக்கில் 4 மாடவீதியில் பவனி வந்தார்.

நேற்று காலை சுப்ரபாத சேவையில் இருந்து இரவு 7 மணி வரை 51ஆயிரத்து 776 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் வைகுண்டத்தில் உள்ள 27 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பின் சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மலைப்பாதையில் பாத யாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசனம் செய்தனர். நேற்று முன் தினம் முதல் காலை வரை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 3.45 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker