Latestமலேசியா

பிகேஆர் துணைத்தலைவர் பதவி; அஸ்மின்- ரஃபிஸி நேரடி மோதலா?

கோலாலம்பூர், ஜூலை.19- பிகேஆர் கட்சித் தேர்தலின் போது துணைத் தலைவர் பதவிக்கு நடப்புத் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை எதிர்த்து உதவித் தலைவரான ரஃபிஸி ரம்லி போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே கட்சிக்குள் இருவேறு துருவங்களாகிக் கொண்டிருக்கும் ரஃபிஸியும் அஸ்மின் அலியும் இந்தப் பலப்பரிட்சையில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது என்றே கூறப்பட்டது.

எனினும், இவ்விரு தலைவர்களும் கட்சியில் முக்கியவத்தும் வாய்ந்தவர்கள் என்பதால் இவர்களின் மோதல் கட்சியை மிகக் கடுமையாக பிளவுப் படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அதேவேளையில் அஸ்மின் அலியா? அல்லது ரஃபிஸியா? என்று வரும் போது பிகேஆரின் மூத்த தலைவரான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆதரவு ராஃபிஸியின் பக்கம் தான் இருக்கும் என்று கட்சி வட்டாரங்களில் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker