Latestமலேசியா

மாணவர்களுக்கு இனி காலணி நிறம் கறுப்பு!

கோலாலம்பூர், ஜூலை.19-  அடுத்தாண்டு முதல் பள்ளி மாணவர்கள் வெள்ளைக் காலணி அணியத் தேவையில்லை என அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் தெரிவித்தார். மாணவர்கள் பள்ளிக்கு கறுப்பு காலணி அணிந்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். இனிமேல் வெள்ளைக் காலணிக்கு இடமில்லை என அவர் கூறினார்.

வெள்ளைக் காலணி அணிவதால் மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து தமது அமைச்சு அம்முடிவை மேற்கொண்டதாக சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினரான மஸ்லி மாலிக் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல், மாணவர்கள் பள்ளிக்குச் சுமந்து செல்லும் புத்தகப்பை சுமையை குறைப்பது தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு காணவும் தமது அமைச்சு பொறுப்பேற்றுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, இன்னும் ஐந்து ஆண்டுகளில் தேசிய கல்வி முறையின் மூலம் மாணவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொள்ளவதைக் காண ஆவல் கொண்டிருப்பதாகவும் மஸ்லி மாலிக் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker