Latestஉலகம்

வட கொரிய அணுவாயுத அழிப்பு: காலக்கெடு இல்லை – டிரம்ப்

வாஷிங்டன். ஜூலை.19- வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை அழிக்கக் கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தையில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டது.

அதற்காக அந்நாட்டிற்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து அது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத அழிப்பு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறுகையில் வட கொரியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. அணு ஆயுதங்களை அழிக்கக் கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வேக உச்ச வரம்பு இல்லை.

அதனால் இவ்விவகாரத்தில் அவசரப்பட தேவையில்லை. வடகொரிய மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன. அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker