Latestஇந்தியா

ஸ்ரீரெட்டி பாலியல் புகார்களுக்கு ‘ஆதாரமில்லை’ -கார்த்திக்

சென்னை, ஜூலை.19- தெலுங்கில் புயலைக் கிளப்பிய பின்னர் தமிழ்த் திரையுலகிலும் பாலியல் தொடர்பான பகிரங்கக் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என நடிகர் சங்கத் துணை பொதுச் செயலாளர் நடிகர் கார்த்தி கூறினார்.

புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பார்த்த ரசிகர்களை கார்த்தி பாண்டிராஜன் உள்ளிட்ட படக்குழுவினரை சந்தித்தனர்.

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் கார்த்தி கூறியதாவது:

ஸ்ரீரெட்டி கூறும் ஆதராமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் தெரிவித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனிடையே சரமாரியாக பாலியல் புகார்களை அள்ளி வீசி வரும் ஸ்ரீரெட்டி, முதன் முறையாக மனம் திறந்து ஒருவரை மிகவும் சிறந்த மனிதர் என்று பாராட்டியுள்ளார், அவர் வேறுயாருமல்ல. நம்ம ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் குமார் தான் அந்தச் சிறந்த மனிதர். இதனை ஶ்ரீரெட்டியே கூறியுள்ளார். அவரது பாராட்டைக் கேட்ட ‘தல’ ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker