Latestமலேசியா

100 நாட்களுக்குள் நிரூபியுங்கள்! – பக்காத்தான் அரசுக்கு ஸாஹிட் சவால்!

கோலாலம்பூர், ஜூலை.19- எஸ்.எஸ்.டி (SST) எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியை அமலுக்கு கொண்டு வந்தால் மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் குறையும் என்பதை நிரூபிக்க பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு 100 நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1-ஆம் தேதி எஸ்.எஸ்.டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டவுடன் அந்த 100 நாட்கள் தொடங்கும் என எதிர்க்கட்சி தலைவருமான அவர் கூறினார்.

“அதன் பின்னர், எஸ்.எஸ்.டி வரியினால் பொருட்களின் விலையும் மக்களின் வாழ்க்கை செலவும் குறைந்துள்ளதா என்பதைக் காண ஓர் ஆண்டு கால அவகாசம் கொடுப்போம்,” என செய்தியாளர்களிடம் ஸாஹிட் ஹமிடி சொன்னார்.

“சில பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் சில ஒப்பீடுகள் செய்யப்பட்டதில் ஜி.எஸ்.டி 160க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுத்தப்பட்டது தெரிய வந்தது. ஆனால், பின்தங்கிய நாடுகள் மட்டுமே இன்னமும் எஸ்.எஸ்.டி வரியை அமல்படுத்துவதாக முன்னாள் துணைப் பிரதமரான அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker