Latestமலேசியா

இறுதியாக எடி குடும்பத்தாரிடம் ரஸ்லான் மன்னிப்புக் கேட்டார்!

கோலாலம்பூர், ஜூலை.20- கைரி ஜமாலுடினின் உட்பட பலரது எதிர்ப்புக்கு கடுமையான கண்டனத்திற்கு பிறகு, ரஸ்லான் ரபீ மறைந்த பாலாகோங் சட்டமன்ற உறுப்பினர் எடி இங் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“எடியின் மறைவை அடுத்து அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தார் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்” என அவர் சற்று முன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில், மலேசியாகினி செய்தி நிறுவனம் ரஸ்லானை தொடர்பு கொண்டபோது, எடி எங்கை அவமதிக்கும் நோக்கத்தில் அவ்வாறு டிவிட் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஜசெக கட்சியைச் சேர்ந்த எடி இங் இன்று அதிகாலையில் செராஸ்-காஜாங் நெடுஞ்சாலையில் விபத்தொன்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அச்செய்தியை அடுத்து, “அவதூறு பேசும் ஒரு கெட்டவர் இறந்துவிட்டார்; மலேசியாவில் அமைதி நிலவட்டும்” என்று ரஸ்லான் டிவிட் செய்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் கருத்துரைந்தனர். அவர்களில், கைடி, அஸாலினா ஆகிய அம்னோ தலைவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker