Latestமலேசியா

எடி இங் மரணம்: அம்னோக்காரரின் அவமதிக்கும் டிவிட்டர்

கோலாலம்பூர், ஜூலை.20- பாலாகோங் சட்டமன்ற உறுப்பினர் எடி இங் விபத்து ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து, அவரது மறைவை அவதிமதிக்கும் வகையில் முன்னாள் கூட்டரசு பிரதேச இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ ரஸ்லான் ரபீ தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

“அவதூறு பேசும் ஒரு கெட்டவர் இறந்துவிட்டார்; மலேசியாவில் அமைதி நிலவட்டும்” என்பது போல ரஸ்லான் பதிவு செய்துள்ளார்.

எடி இங்கின் மறைவு குறித்து பலரும் வருத்தம் தெரிவித்துவரும் வேளையில் அதற்கு எதிராக ரஸ்லான் இந்த மனிதமற்ற பதிவை செய்திருக்கிறார்.

ரஸ்லானின் அந்த டிவிட்டர் பதிவு பலருக்கு அதிருப்தியையும் வேதனையையும் அளித்திருக்கிறது. அதன் எதிரொலியாக பலரும் அந்த பதிவின் கீழ் ரஸ்லானைத் திட்டி பதிவிட்டுள்ளனர்.

ஜசெக கட்சியைச் சேர்ந்த எடி இங் இன்று அதிகாலையில் செராஸ்-காஜாங் நெடுஞ்சாலையில் விபத்தொன்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker