Latestமலேசியா

எடி மறைவை அவமதித்த ரஸ்லான் மீது நடவடிக்கை எடுங்கள்-தலைவர்கள்

கோலாலம்பூர், ஜூலை.20- பாலாகோங் சட்டமன்ற உறுப்பினர் எடி இங்கின் மறைவை அவதிமதிக்கும் வகையில் டிவிட் செய்திருந்த டத்தோ ரஸ்லான் ரபீ மீது அம்னோ தேசியத் தலைவர் ஸாஹிட் ஹமிடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார்.

ரஸ்லான் போன்ற அம்னோ தலைவர்களால்தான் அம்னோ மக்களின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டது. அதனால், ஸாஹிட் தமது தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஸ்லான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.

கைரி மட்டுமில்லாது, அம்னோவின் முன்னாள் அமைச்சரான அஸாலினா ஒத்மானும் ரஸ்லானின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். “எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு உள்ளது. இது மன்னிக்க முடியாத செயல். முஸ்லிம்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு மரியாதை தர வேண்டும்” என அவர் கருத்துரைத்துள்ளார்.

இதனிடையே, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் ரஸ்லானின் டிவிட்டர் பதிவுக்கு எதிராக கண்டம் தெரிவித்துள்ளனர்.
“பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் மனநிலையைக் கொஞ்சமும் ரஸ்லான் நினைத்துப் பார்க்கவில்லை” என நில, நீர், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தமது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அவரை அடுத்து, ஶ்ரீ கெம்பங்கான் சட்டமன்ற உறுப்பினர் ஈன் யோங் ஹியான் வா “இது வெந்த புண்ணில் உப்பைத் தேய்க்கும்” செயல் என ரஸ்லானை வன்மையாக கண்டித்துப் பேசியுள்ளார். அம்னோ ரஸ்லான் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஜசெக கட்சியைச் சேர்ந்த எடி இங் இன்று அதிகாலையில் செராஸ்-காஜாங் நெடுஞ்சாலையில் விபத்தொன்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அச்செய்தியை அடுத்து, “அவதூறு பேசும் ஒரு கெட்டவர் இறந்துவிட்டார்; மலேசியாவில் அமைதி நிலவட்டும்” என்று ரஸ்லான் டிவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker