Latestமலேசியா

எம்.எச்.370: முழு இறுதி அறிக்கை ஜூலை 30-இல் வெளியிடப்படும்!

கோலாலம்பூர், ஜூலை.20- கடந்த 2014-ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 8-ஆம் தேதியன்று 239 பயணிகளுடன் மாயமான எம் எச்.370 விமானம் குறித்தான முழுமையான மற்றும் இறுதி அறிக்கை, ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப் படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

அந்தச் சம்பவத்தில் காணாமல் போன பயணிகளின் உற்றார் உறவினர்களிடத்தில் அந்த அறிக்கையை நேரடியாக சமர்ப்பிக்க அமைச்சரவை போக்குவரத்து அமைச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் பின்னர், அந்த அறிக்கை குறித்தான விவரம், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப் படும்.

எம் எச்.370 விசாரணைக் குழுத் தலைவர் டத்தோ கோக் சூ சொன் அந்த அறிக்கை குறித்தான விவரங்களை காணாமல் போன பயணிகளின் உறவினருக்கு தெரிவித்த பின்னர், மதியம் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிப்பார் என்று அந்தோணி லோக் கூறினார்.

“அச்சம்பவம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு, சரியான பதில்களை அந்த விசாரணைக் குழுவினரால் தான் வழங்க முடியும். அதனால், அந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தகுந்தவர்கள் அவர்களே என்று அமைச்சு முடிவெடுத்துள்ளது” என்றார் அவர்.

வெளிப்படையாக அந்த அறிக்கை அறிவிக்கப் படும் என்றும், தகவல்கள் ஏதும் மறைக்கப்படாமல், அது பொது மக்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் படும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் ஜூலை 31-ஆம் தேதியன்று பகிர்ந்துக் கொள்ளப் படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker