Latestஇந்தியா

ஏர்செல் வழக்கு: சிதம்பரம் உள்பட 12 பேரின் பெயர்கள் சேர்ப்பு!

புதுடில்லி, ஜூலை. 20- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 12 பேருக்கு எதிராக, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ துணை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

2006-ஆம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் குற்றப்பதிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன மலேசிய செல்வந்தர் டான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது முன்னாள் உதவியாளர் ரால்ப் மார்ஷல் ஆகியோரின் பெயர்கள் இப்போதுஆதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது டில்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்த வழக்கில் 2014-ஆம் ஆண்டு சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில் முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயர் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுபட்ட சில தகவல்கள், ஆதாரங்களை இணைத்து சிபிஐ, பாட்டியாலா நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில், ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் பெயர்களும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன. இது தவிர முன்னாள் மற்றும் தற்போதைய அரசு ஊழியர்கள்பலரது பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker