Latestமலேசியா

சுங்கை கண்டிஸ்: தேமு சார்பில் லோக்மான் அடாம் போட்டி

கோலாலம்பூர், ஜூலை.20- ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் தேமு, அம்னோ மத்திய செயலவை உறுப்பினரான டத்தோ லோக்மான் அடாமை போட்டிக்கு நிறுத்துகிறது. அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசான் இதனை அறிவித்தார்.

பிகேஆரின் முகமட் ஸாவாவி அகமட் முக்னி இத்தேர்தலில் களமிறங்கிறார் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தல் தேமுவுக்கும், பக்காத்தானுக்குமான நேரடிப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நாளை நடைபெறவுள்ள வேட்புமனுத் தாக்கலில்தான் எத்தனைப் பேர் போட்டியிடவுள்ளனர் என்பது தெரியவரும்.

இதனிடையே, இந்த தேர்தலில் தேமுவை தமக்கு ஆதரவு வழங்குமாறு லோக்மான் சுங்கை கண்டிஸ் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். “நான் வெற்றிப் பெற்றால் சிலாங்கூரை பக்காத்தான் அரசிடமிருந்து கைப்பற்ற முடியாதுதான். ஆனால், நான் வெற்றிப் பெற்றால் அம்மாநிலத்தில் பக்காத்தான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றதா என்பதை மக்கள் சார்பில் நான் கண்காணிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாப்பி புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker