Latestமலேசியா

ஜசெக தலைவர்களுக்கு கொலை மிரட்டல்! -போலீஸ் விசாரிக்குமா?

கோலாலம்பூர், ஜூலை.20- ஜசெக தலைவர்களான இஙா கோர் கிங் மற்றும் லீவ் சின் தோங் ஆகியோருக்கு முகநூல் வாயிலாக கொலை மிரட்டல்கள் விடுக்கப் பட்டுள்ளது தொடர்பில், பேரா சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் போலீஸ் புகார் செய்துள்ளார்.

“ஜிங் ஹோங்” என்ற அந்த முகநூல் வாசியின் உண்மை அடையாளத்தை போலீசார் கண்டுப் பிடிக்க வேண்டும் என்று கெரான்ஜி சட்டமன்ற உறுப்பினர் சோங் ஸீமீன் தனது போலீஸ் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

“பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த நீங்கள் இருவரும் என்னை ஆத்திரமடையச் செய்கின்றீர்கள். காத்துக் கொண்டிருங்கள். உங்கள் இருவரையும் கொன்று, தியோ பெங் ஹோக்குடன் அனுப்பி வைக்கின்றேன்” என்று அந்த முகநூல் வாசி சீன மொழியில் தனது முகநூல் பக்கத்தில் எழுதி உள்ளார்.

அந்தத் தகவலுடன் துப்பாக்கி படம் ஒன்றையும் அந்த முகநூல் வாசி இணைத்துள்ளார். இஙா தெலுக் இந்தான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் அவர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் ஆவார். லீவ் அண்மையில் செனட்டராக நியமிக்கப் பட்டார். அவர் தற்காப்பு அமைச்சின் துணை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

அவ்விருவருக்கும் விடுக்கப் பட்டுள்ள கொலை மிரட்டல் நிரூபனமானால், குற்றவியல் சட்டத்தின் 506-ஆவது பிரிவின் கீழ், சம்பந்தப் பட்டவருக்கு ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த முகநூல் வாசியை கண்டுப்பிடிக்கும் பொருட்டு, தாம் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சிடமும் புகார் கொடுக்க விருப்பதாக சோங் ஸீமீன் தெரிவித்துக் கொண்டார். ]

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker