Latestமலேசியா

ஜோ லோ கைதா? ‘தெரியாது’ என்கிறது தூதரகம்!

பெய்ஜிங், ஜூலை.20- 1எம்டிபி சர்ச்சையின் தொடர்பில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக எந்தத் தகவலும் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகம் தெரிவித்தது.

ஜோ லோ கைது செய்யப்பட்டு விட்டதாக பல உள்ளூர், வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தி இன்னமும் உறுதி படுத்தப்படவில்லை என அது கூறியது. ஹாங் காங்கில் உள்ள ஒரு வானொலி நிலையம் ஜோ லோ சைனாவில் கைது செய்யப்பட்டு விட்டதாக செய்தி ஒளிபரப்பியதாக ‘சராவாக் ரிப்போர்ட்’ நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனிடையே, ஜோ லோ கைதானது தொடர்பாக எவ்வித தகவலையும் பெறவில்லை எனவும் அதனை உறுதிப்படுத்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹருண் நேற்று தெரிவித்தார்.

1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில், எம்.ஏ.சி.சி தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல் கேட்டுக்கொண்டதை அடுத்து 36 வயது ஜோ லோவின் கடப்பிதழ் கடந்த ஜூன் 15-ஆம் தேதி முடக்கப்பட்டது. மக்காவில் ஒளிந்திருப்பதாக கூறப்பட்ட தொழிலதிபர் ஜோ லோ, அங்கிருந்தும் ஓடிவிட்டதாக கடந்த வாரம் ஐஜிபி கூறியிருந்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker