Latestமலேசியா

நஜிப் வீட்டுப் பணிப்பெண்களுடன் போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஜூலை.20- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் இன்று காணப்பட்டதாக கூறப்படும் போலீசார், நஜிப்பின் பணிப்பெண்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

நஜிப் செய்த போலீஸ் புகாரை அடுத்து அவர் வீட்டுப் பணிகள் விசாரிக்கப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் ரூஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இன்று நண்பகலில், ஏறக்குறைய ஆறு போலீசார் நஜிப் வீட்டில் நுழைந்ததாக தகவல் வெளியிடப்பட்டது. 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் நஜிப் மீண்டும் விசாரிக்கப்பட்டார் என்று தேசிய போலீஸ் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நோர் ரஷிட் இப்ராஹிம் நேற்று உறுதிப்படுத்தியதை அடுத்து, இன்று நஜிப்பின் வீட்டில் போலீசார் காணப்பட்ட செய்தி பரபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker