Latestசினிமா

நடிகர் விஷாலிடம் மன்னிப்பு கேட்ட ஸ்ரீரெட்டி!

சென்னை, ஜூலை.20- தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி திரையுலகை அதிர வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, திடிரென நடிகர் விஷாலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பட்டியலில் இயக்குனர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர்சி உள்ளிட்ட சிலரின் பெயர்களை அடுக்கடுக்காய் வெளியிட்டு வரும் நிலையில் சுந்தர்சி வழக்கு தொடர்வேன் என்று பதிலடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி முகநூல் பதிவில் நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியிருந்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் விஷாலிடம் தன்னை மன்னித்து விடும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ‘நடிகைகளுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களால் தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்’ என வேண்டுக்கோள் ஒன்றையும் வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker