Latestஇந்தியா

நடிகை பிரியங்கா தற்கொலை: விசாரணையில் புதுத் தகவல்!

சென்னை, ஜூலை.20- பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு கணவரின் கண்டிப்பை ஏற்றுக் கொள்ள முடியாததே காரணம் என்று கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் பிரியங்காவுக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் மனவேதனையில் இருந்ததாகவும் மூன்று மாதம் தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த பிரியங்கா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண் என்பவரை காதலித்து மணந்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் அருண் தனது தொழிலில் பணம் சம்பாதிக்க அதிக சிரமப்பட்டுள்ளார். இதனால் தனியாக தொழிலும் செய்து வுந்துள்ளார்.
மேலும் நடிகையாக இருக்கும் பிரியங்கா, வீட்டிற்கு தாமதமாக வருவதை அருண் விரும்பவில்லை. வீட்டிற்கு தாமதமாக வராதே என பலமுறை பிரியங்காவை எச்சரித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி விவகாரத்து செய்து கொள்வதற்காக இவர்கள் இருவரும் ஒரு வழக்கறிஞரை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரியவருகிறது. ஆனால் இன்னும் விவகாரத்து மனுத் தாக்கல் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker