Latestஉலகம்

நடுவானில் விமானத்தின் இறக்கையில் தீ! இருவர் பலி! -(VIDEO)

பிரிட்டோரியோ, ஜூலை. 20- தென்னாப்பிரிக்கா உள்நாட்டு விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக அதன் இறக்கைத் தீப் பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் பலியாயினர்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்ட சிலமணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானம் பறந்து கொண்டிருக்கையில், விமானத்தில் உள்பக்க பாகங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

VIDEO SOURCE: YOU TUBE

ஏதோ நடக்கிறது என்ற பீதியோடு பயணிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த தருணத்திலேயே விமானத்தின் இறக்கை தீப் பிடித்தது.

இந்தத்தீ உள்ளே பரவியதில் இருவர் கடுமையாக காயமடைந்து உயிரிழந்தனர். மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று விமான நிறுவன அறிக்கை ஒன்று கூறியது.

விமானி சாதுர்யமாக செயல்பட்டு, வெற்றிகரமாக மீண்டும் விமானத்தை பிரிட்டோரியோ நகரின் வொண்டர்பூன் விமானநிலையத்தில் தரை இறக்கினார்.

ஆனாலும், உள்ளே இருந்த பயணிகள் பெரிய அளவில் பெரும்பாலோர் மனதில் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்தது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker