Latestமலேசியா

பாலாகோங் சட்டமன்ற உறுப்பினர் சாலை விபத்தில் பலி!

கோலாலம்பூர், ஜூலை.20- கிராண்ட் சாகா நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 11.7-இல் நிகழ்ந்த சாலை விபத்தில் பாலாகோங் சட்டமன்ற உறுப்பினர் எங் தியன் சீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று நள்ளிரவு 12.40 மணி அளவில் அவ்விபத்து நிகழ்ந்த போது அவர் கோலாலம்பூரில் இருந்து காஜாங்கை நோக்கிச் சென்றிருக்கக் கூடும் என காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் சாபிர் முகமட் யூசோப் கூறினார்.

தொடக்க கட்ட விசாரணையில் SUV Nissan x-Trail இரகக் காரை ஓட்டிச் சென்ற எங் தியன் நெடுஞ்சாலைக்குச் சொந்தமான லோரியை பின்புறமாக மோதியுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, உயிரிழந்த எங் தியனின் குடும்பத்தினருக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.

நடந்து முடிந்த 14-ஆவது பொதுத்தேர்தலில் எங் தியன் 35,538 வாக்குகள் அதிகம் பெற்று தேசிய முன்னணியைச் சேர்ந்த லிம் சின் வாவையும் பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் இப்ராகிம் கசாலியையும் வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker