Latestமலேசியா

பேராசிரியர் இராமசாமிக்கு எதிராக மறியல்

கோலாலம்பூர், ஜூலை.20- இஸ்லாமிய மத போதகரான ஸாகிர் நாயக்கை திருப்பி அனுப்புமாறு கூறிய பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சரான பேராசிரியர் இராமசாமிக்கு எதிராக ஆர்பாட்டத்தை தெரிவிக்க அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஷேய்க் யூசோப் மசூதி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் திரண்ட அவர்கள் ‘இராமசாமியை பிடியுங்கள்’ என முழக்கமிட்டதோடு இஸ்லாமை தேசிய சமயமாக மதிக்குமாறும் இராமசாமிக்கு வலியுறுத்தினர்.

அம்மறியல் போக்குவரத்துக்குத் தடையாக இல்லாமல் இருக்கவும் அமைதியாக நடைபெறுவதையும் உறுதி செய்ய போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.

இதனிடையே, இலங்கையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இராமசாமிக்கும் இடையே தொடர்பு உள்ளதாக இதுவரை 53 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker