Latestமலேசியா

போதைப்பொருள்: தோக்கியோவில் 2 மலேசிய பெண்கள் கைது!

கோலாலம்பூர், ஜூலை.20-  போதைப்பொருளை உள்ளாடைகளில் மறைத்து கடத்திய இரண்டு மலேசிய பெண்களை தோக்கியோவில் உள்ள அனேடா விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

20 மற்றும் 22 வயதுடைய அவ்விரு பெண்களிடம் 1.5 கிலோகிராம் ‘ஸ்திமுலன்’ இரக போதைப்பொருள் கொண்ட எட்டு பொட்டலங்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 90 மில்லியன் யென் (RM3,251,440) ஆகும் என குற்றவியல் தடுப்பு அமைப்புக் கூறியது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அனேடா விமான நிலையத்தைச் சென்றடைந்த அந்த இரண்டு பெண்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட குடிநுழைவுத் துறை அதிகாரிகள், அவர்களைப் பரிசோதித்தப் பின்னர் அப்பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உள்ளாடையில் போதைப்பொருளை மறைத்துக் கடத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும், அந்த இரண்டு மலேசிய பெண்களும் ஒரே தங்கும் விடுதியில் பணி புரிபவர்கள் என்றும் குறுகிய கால விசாவுடன் ஜப்பானிற்கு அவர்கள் வருவது இதுவே முதல் முறை எனவும் தெரிய வந்துள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker