Latestமலேசியா

மன உளைச்சல் காரணமாக ஆசிரியை தற்கொலை

ஈப்போ, ஜூலை.20- ஆசிரியை ஒருவர் ஒரு பேரங்காடியின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

ஐந்தாவது மாடியில் அந்த ஆசிரியைக் கண்ட அப்பேரங்காடியின் பாதுகாவலர், அவரை அப்பகுதியில் இருக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளார். ஆனால், பாதுகாவலர் அவ்வாறு கூறிய அடுத்த கணமே அந்த ஆசிரியை அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.

அச்சம்பவம் நேற்று மதியம் 3.50 மணி அளவில் நிகழ்ந்தது. 36 வயது லியூ கிட் மொய் என்ற அந்த ஆசிரியையின் சடலம் பேரங்காடிக்கு வாகனங்கள் வந்து போகும் பாதையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

லியூ கிட் மொய் மாடியில் இருந்து கீழே குதித்ததை நேரில் பார்த்த பாதுகாவலரிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அச்சம்பவத்தின் பின்னணியில் எந்தக் குற்றச்செயலும் இல்லை என தெரிய வந்துள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அலி தம்பி கூறினார்.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லியூ கிட் மொய்யின் கணவர் அந்த ஆசிரியர் பாசிர் புத்தேவில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் சமீப காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.அதோடு, இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான அவர் சென்ற வாரம் தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதாகவும் அவரின் கணவர் தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியையின் சடலம் சவப் பரிசோதனைக்காக ராஜா பெர்மாய்சுரி பாய்னுன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker