Latestமலேசியா

முஸ்லிம் சிறுமிகளின் திருமண வயது மறுபரிசீலனை! -அமைச்சர்

கோலாலம்பூர், ஜூலை.20- முஸ்லீம் சிறுமிகளின் அதிகாரப்பூர்வ திருமண வயது சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லீவ் வூய் கியோங் கேட்டுக் கொண்டார்.

16 வயதிற்கு குறைந்த சிறுமிகளின் திருமண வயது குறித்து தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை.“வயது குறைந்த சிறுமிகளின் திருமண வயது” என்று கூறப்படும் அந்தச் சட்டத்தில், எந்த வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள அனுமதி வழங்கப் படுகிறது என்பது குறித்தும் விவரிக்கப் படவில்லை என்று அவர் சொன்னார்.

பெற்றோர்களின் அனுமதியைப் பெற்று, சிறுமிகள் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற சட்டம் நிலைப்பாட்டில் உள்ள போதிலும், அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய அவசியம் உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

“10 அல்லது 8 வயது அடைந்த சிறுமிகளும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளதா? அப்படி கூறப்பட்டிருந்தால், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வயதினர் பருவம் கூட அடைந்திருக்க மாட்டார்கள்” என்றார் அவர்.

குவா மூசாங் பகுதியைச் சேர்ந்த 41 வயது ஆடவன், 11 வயதுச் சிறுமி ஒருத்தியை தனது மூன்றாவது மனைவியாக திருமணம் செய்துக் கொண்டது குறித்து கருத்துரைத்த போது, லீவ் அவ்வாறு கூறினார்.

அத்திருமணத்தை அச்சிறுமியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளதால், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அந்தத் திருமணம் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
சிறார்களை பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக அந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளதாகவும், அதனால், அச்சிறுமி ஏதோ ஒரு வகையில் பாதிக்கப் பட்டுள்ளார் என்றும் அவர் சொன்னார்.

“திருமண வயது 16-ஆக இருக்கும் பட்சத்தில், சிறுமிகள் 16 வயதை அடையும் வரை, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் கல்வியை வழங்க நாங்கள் விருப்பம் கொண்டுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
அச்சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, சம்பந்தப்பட்ட பங்குத்தாரர்கள் அல்லது தரப்பினருடன் தாம் கலந்தாலோசிக்க விருப்பதாக லீவ் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker