Latestமலேசியா

லிம் குவான் எங்கைவிட அஸ்மினுக்கே அதிக அதிகாரமா?

கோலாலம்பூர், ஜூலை.20- நாட்டில் இதுவரை நிதியமைச்சராக இருந்தவர்களுக்கென ஒரு தனி அதிகாரம் இருந்தது. ஆனால், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் அப்படியில்லை. நிதியமைச்சர் லிம் குவான் எங்கைவிட பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலிக்கே பிரதமர் துன் மகாதீர் அதிக அதிகாரத்தை வழங்கியுள்ளதாக மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார்.

இது தம்முடைய தனிப்பட்ட கருத்து இல்லை; ஒட்டுமொத்த மக்களின் கருத்தும்கூட என ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற உறுப்பினராக வீ கா சியோங் நேற்றைய மக்களவையில் குறிப்பிட்டார்.லிம் குவானின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அந்த அதிகாரங்கள் அஸ்மின் அலியின் அமைச்சுக்கு வழங்க்கப்பட்டுள்ளதாக மக்கள் கருதுவதாக அவர் சொன்னார்.

நிதியமைச்சின் கீழ் செயல்பட்ட சில முக்கிய நிறுவனங்கள் பொருளியல் விவகார அமைச்சின் கீழ் செயல்படுவதற்கு மாற்றப்பட்டுள்ளதை அவர் உதாரணமாகச் சுட்டிக் காட்டினார். அப்படியானால், எந்த அமைச்சுதான் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொறுப்பேற்கும்? எந்த அமைச்சரின் உத்தரவைத்தான் அந்நிறுவன பணியாளர்கள் பின்பற்ற வேண்டும்? என்பதற்கு எல்லாம் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என வீ கா சியோங் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பொருளியல் விவகார அமைச்சு இருக்கும்போது எதற்காக தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சை அமைக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்த அமைச்சுகளுடன் செயல்படவிருப்பதாக கூறி இருந்த பக்காத்தான் அரசு தற்போது முந்தைய அமைச்சரவைப் போலத்தான் இருக்கிறது என்றார் அவர்.

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker