Latestஉலகம்

விதிமீறல்: கூகுளுக்கு 5,000 கோடி டாலர் அபராதம்!

நியூயார்க், ஜூலை.20- ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்திற்கு 5,000 கோடி அமெரிக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் முன்னணி இணையத் தளங்களுள் ஒன்றாக செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தியுள்ளது.

இதில் தனது ஆதிக்கத்தினை செலுத்திவரும் வகையில், வரம்புகளை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்சோங், ஹூவா-வே போன்ற ஆண்ட்ராய்டு செல்போன்களில் விதிமுறைகளை தவறாகப் பயன்படுத்தி முன்கூட்டியே கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை நிறுவியுள்ளது.

இதன் மூலம் தனது போட்டியாளர்களை கூகுள் நிறுவனம் ஒடுக்கியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையின், விதிகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு 5,000 கோடி அமெரிக்கா டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும், 90 நாட்களுக்குள் சட்ட விரோதமான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் உத்தரவினை எதிர்த்து மேல் முறையீடு செய்யபோவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker