Latestமலேசியா

சட்ட விரோத தொழிலாளர்கள்: ஆக. 31 ஆம் தேதி முதல் தீவிர வேட்டை!

குவாந்தான், ஜூலை.21- சட்ட விரோதக் குடியேறிகள் இல்லாத நாடாக மலேசியா விளங்கும் வகையிலான நடவடிக்கைகள் ஆகஸ்டு 31ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ முஸ்தாஃபார் அலி தெரிவித்தார்.

குறிப்பிட்ட அந்தத் தேதிக்குப் பின்னர் சட்ட விரோதக் குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களில் சட்ட விரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தி இருக்கும் முதலாளிகளும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

இத்தகைய சட்ட விரோதக் குடியேறிகள் சுயமாக சரணடையும் திட்டத்தை அல்லது 3+1 என்ற திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இதன் வழி அவர்கள் சரணடைந்தால் அவர்களை அவர்களுடைய நாட்டுக்கு சொந்தமாக செல்ல அனுமதித்தோம். அந்த வகையில் ஆகஸ்டு 30ஆம் தேதி வரையில் அவர்கள் சுயமாக சரணடைய இன்னமும் வாய்ப்பு இருக்கிறது. என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker