Latestஉலகம்

சிங்கப்பூர் பிரதமரின் தரவுகள் களவு

சிங்கப்பூர், ஜூலை.21- சிங்கப்பூர் அரசின் சுகாதாரத் தரவுத் தளத்தில் இருந்து பிரதமர் லீ சியேன் லூங் உட்பட சுமார் 15 லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் இணைய ஊடுருவிகளால் திருடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரையில் இல்லாத மிக மோசமான இணையத் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

ஊடுருவப்பட்ட ‘SingHealth’ இணையத் தளத்தில் இருந்து நோயாளிகளின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி ஆகிய தனிப்பட்ட விவரங்கள் களவாடப்பட்டுள்ளன. ‘SingHealth’ வெளிநோயாளி மருந்தகங்களின் மூலம் நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளின் விவரங்களும் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் லீயின் தகவல்களைத் திருவதற்கெனவே பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சும் தொடர்பு, தகவல் அமைச்சும் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் 27 முதலே இந்த தரவுகளைக் களவாடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இம்மாதம் 4-ஆம் தேதிதான் இது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டன.

இதனிடையே, இந்த ஊடுருவல், திட்டமிடப்பட்டு, குறிப்பிட்ட நோக்கத்துடன் நடத்தப்பட்ட இணையத் தாக்குதல் என்று சிங்கப்பூர் தொடர்பு, தகவல் அமைச்சர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இருப்பினும் நோயாளிகளின் தகவல்களும், நோய்க் குறிப்புகளும் அழிக்கப்படவும் இல்லை ; மாற்றப்படவுமில்லைமில்லை என அவர் தெரிவித்தார். இந்த இணைய ஊடுருவல் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker